×

தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாஜவின் பொய் வாக்குறுதி: கார்கே விமர்சனம்

ராய்ப்பூர்: மகளிர் இடஒதுக்கீடு மசோதா பொய் வாக்குறுதி என கூறி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, தேர்தலில் மக்களிடம் ஓட்டு பெற்றதும் வழக்கம் போல் இந்த வாக்குறுதியையும் பாஜ மறந்து விடும் என்றார். சட்டீஸ்கர் மாநிலம் சுமாபட்டா கிராமத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள் மாநாட்டில் நேற்று பங்கேற்ற காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பாஜ முயற்சிக்கிறது.

எனவே அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மக்கள் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை ஆதரிக்க வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது பாஜ எதிர்த்தது. அப்போது எங்களுக்கு பெரும்பான்மை இருந்த அவையில் மசோதாவை நிறைவேற்றினோம். மற்றொரு அவையில் பாஜ தோற்கடித்தது. ஆனால் இப்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான பெருமையை பாஜ தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

இந்த விஷயத்தில் மக்களை தவறாக வழிநடத்துகிறது பாஜ. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, அனைவர் வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு என பிரதமர் மோடி தந்த அனைத்து வாக்குறுதிகளும் வாக்குகளுக்காக கூறப்பட்ட பொய். அதுபோல, தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டதும், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பாஜ மறந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் முடிந்ததும் மறந்துவிடுவார்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாஜவின் பொய் வாக்குறுதி: கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Baja ,Raipur ,Congress ,National Leader ,Mallikarjuna Karke ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...